Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
16 வயதான மாணவிக்கு வைத்தியசாலையில் ஏற்பட்ட கதி

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 7ம் திகதி நடந்துள்ளது. மஹியங்கனை, அளுத்தரம, பத்தலயாய பிரதேசத்தை சேர்ந்த 16 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 5ம் திகதி இந்த மாணவியை வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

மாணவிக்கு ஊசி மருந்து செலுத்திய பின்னர், அவரது உடலில் வெடிப்புகள் ஏற்பட்டதாக மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 6ம் திகதி இரவு வழங்கப்பட்ட இந்த ஊசி மருந்து காரணமாக மாணவியின் உடல் நிலை மோசமாகியுள்ளது.

இதனையடுத்து மறுநாள் அதிகாலை 2 மணியளவில் மாணவி உயிரிழந்துள்ளார்.

இது சம்பந்தமாக கருத்து வெளியிட்ட மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.எம். சேனரத்,

இந்த மரணம் சம்பந்தமாக எமது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனைகளை நடத்தினார்.

மாணவிக்கு நிமோனியா ஏற்பட்டதால், கல்லீரல் உட்பட உடலில் முக்கியமான உறுப்புகள் சேதமடைந்ததன் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக சட்டவைத்திய அதிகாரி தனது அறிக்கையில் கூறியுள்ளார் என வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
11 Jul 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker