Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
வேட்டி கட்டியதால் வந்த வினை (படம் இணைப்பு )

தேப்லினா சென் என்ற நடிகையும், அவரது நண்பரும் கொல்கத்தாவில் உள்ள Quest Mall-க்குச் சென்றனர். அப்போது வேட்டி கட்டியிருந்த தேப்லினா சென்னின் நண்பரை மாலுக்குள் நுழையக் கூடாது என்று அங்கிருந்த பாதுகாப்பு அலுவலர்கள் அனுமதிக்க வில்லை.

வேட்டி அல்லது லுங்கி அணிந்து வருபவர்களுக்குள் மாலுக்குள் அனுமதி இல்லை என்று கூறி இருக்கின்றனர். ஏன் அனுமதி இல்லை என்று கேட்டதற்கு, பாதுகாப்புக் காரணங்களுக்காக வேட்டி கட்டியவர்கள் அனுமதிக்க முடியாது என்று சொன்னார்கள். வேட்டி கட்டிய அந்த நபர், ஆங்கிலத்தில் பேசியதை அடுத்து அவரை மாலுக்குள் அனுமதி அளித்தனர்.

ஆங்கிலம் பேசுபவரும், மார்டன் உடையில் வருபவர்கள் மட்டுமே மாலுக்குள் அனுமதிப்போம் என்று சொல்வது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பண்பாட்டு அடையாளத்துக்கு எதிராக மால் ஊழியர்கள் செயல்படுகின்றனர்.

ஒரு வேளை வேட்டி கட்டிய அந்த நபர், வங்க மொழியில் பேசியிருந்தால், நிச்சயமாக மாலுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று தெரிகிறது. உள்ளூர் மொழியில் பேசுபவர்களையும், வேட்டி கட்டியருப்பவர்களும் தாய் மொழி மீது பற்றுள்ளவர்கள் என்றும், அவர்களை மாலுக்குள் அனுமதித்தான் பொது அமைதி கெடும் என்றும் ஒரு தவறான முன்னுதாரணத்தை மால் நிர்வாகிகள் கொண்டுள்ளனர்.
16 Jul 2017
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker