Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
சங்கக்கார மனைவியுடன் சாப்பிட்ட ஒரு நேர சாப்பாடு இத்தனை இலட்சமா (படம் இணைப்பு )

இலங்கையின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர், குமார் சங்கக்கார தம்பதியருக்கு, 38 இலட்ச ரூபா பெறுமதி வாய்ந்த உணவுக்குப் பின்னான சிற்றுண்டியை, நுவரெலியாவின் பிரபல உணவகம் ஒன்று வழங்கிக் கௌரவித்துள்ளமையானது, பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மேற்படி உணவகத்தின் புகழ்பெற்ற உணவுக் கலை நிபுணர், விராஜ் ஜயரத்னவின் 25 ஆண்டு காலத் தொழில்சார் பூர்த்தியை முன்னிட்டும், இலங்கையின் உல்லாசப் பயணத் துறையை ஊக்குவிக்கும் வகையிலுமே, இந்தச் சிற்றுண்டி தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மெரி மீ(Meri Me) என்று அழைக்கப்படும் இந்தச் சிற்றுண்டியானது, சிறு பல்லக்கில் எடுத்துவரப்பட்டு பாரம்பரிய முறைப்படி சங்கக்கார தம்பதியருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கிறிஸ்தவ விவகார அலுவல்கள் மற்றும் சுற்றுலாப் பயணத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்கவும் கலந்துகொண்டுள்ளார்.

சிற்றுண்டியைத் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பலவும் வெளிநாடுகளில் இருந்து விசேடமாகத் கொண்டுவரப்பட்டு குறித்த சிற்றுண்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சிற்றுண்டியை அலங்கரிக்க, சிறு தாமரைக் கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மேல் விலையுயர்ந்த வைரக் கல் ஒன்று வைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளமையே,இந்த சிற்றுண்டியின் சிறப்பம்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
05 Jan 2018
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker