Tamilwin Lankasri Manithan
Share with Facebook Friends Share
விசேட செய்திகள்
மனைவிக்கு கோவில் கட்டிய கணவன்: வியக்க வைக்கும் உண்மை! (படம் இணைப்பு )

இந்தியா, கர்நாடகா மாநிலத்தில் மனைவிக்கு கோவில் கட்டியுள்ள விவசாயி கடந்த 12 வருடமாக பூஜை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ராஜூ என்ற ராஜசாமி. விவசாய கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜம்மா.

ராஜூ கடந்த 2006-ம் ஆண்டு தனது மனைவி ராஜம்மாவுக்கு கோவில் கட்டினார். இந்தக் கோவிலில் மூல விக்ரகமாக ராஜம்மா உள்ளார்.
சிவன், நவக்கிரகங்கள், சனீஸ்வரர், சித்தப்பாஜி ஆகியோரது சிலைகளும் உள்ளன.

இந்தக்கோவில் கட்டியது குறித்து ராஜூ கூறியதாவது..

நான் எனது சகோதரி மகளான ராஜம்மாவை காதலித்து மணந்தேன். எங்களது காதலுக்கு எனது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். என்றாலும் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டோம்.

எனது சகோதரியையும் அவரது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் ராஜம்மாவை மணந்து கொண்டேன். எனது மனைவி தனக்கு கோவில் கட்டுமாறு கூறினார்.

கோவில் கட்ட உறவினர்களும், கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். நான் அவர்களது எதிர்ப்பை மீறி 2 ஆண்டுகள் கஷ்டப்பட்டு இந்தக்கோவிலை கட்டினேன். பின்னர் எனது மனைவி இறந்து விட்டார். எங்களது காதல் தெய்வீக காதல் என்பதால் எனது மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்தேன். என அவர் கூறினார்.
24 Feb 2018
இலங்கைச் செய்திகள்
மரண அறிவித்தல்கள்
Lankari Notice
வினோதச் செய்திகள்
Lankasri Radio
விளையாட்டுச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமாச் செய்திகள்
இந்தியச் செய்திகள்
தொழிநுட்பச் செய்திகள்
eXTReMe Tracker